/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அரசு பள்ளியில் வெளி மாநில மாணவர்கள் சேர்க்கையில் குழப்பம்
/
அரசு பள்ளியில் வெளி மாநில மாணவர்கள் சேர்க்கையில் குழப்பம்
அரசு பள்ளியில் வெளி மாநில மாணவர்கள் சேர்க்கையில் குழப்பம்
அரசு பள்ளியில் வெளி மாநில மாணவர்கள் சேர்க்கையில் குழப்பம்
ADDED : ஜூலை 13, 2024 04:23 PM
சிங்கம்புணரி:
அரசுப்பள்ளி, கல்லுாரிகளில் வெளி மாநில மாணவர்கள் அட்மிஷன் பெற கல்வி சான்றிதழ்களுடன் மைக்ரேஷன் சர்டிபிகேட் ( இடம் பெயர்வு சான்றிதழ் ) அளித்தால் போதும் என சிவகங்கை முதன்மைக்கல்வி அலுவலர் பாலுமுத்து தெரிவித்தார்.
வெளி மாநில மாணவர்கள் தமிழக பள்ளிகளில் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் சேரும்போது பல்வேறு சான்றிதழ் கேட்பதாக புகார் வருகிறது. குறிப்பாக ஏற்கனவே படித்த மாநிலத்தில் வழங்கப்பட்ட உறுதித் தன்மை சான்றிதழ் வேண்டுமென்றும்,அந்த சான்றிதழுடன் தமிழக பள்ளிக்கல்வித்துறையில் சமநிலை சான்றிதழ் வாங்கி வர வலியுறுத்துவதாக மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இது அம்மாணவர்களுக்கு அலைச்சலையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியது.
சிங்கம்புணரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வெளிமாநில மாணவி ஒருவர் 11ம் வகுப்பில் அட்மிஷனுக்காக வந்தபோது அவரிடம் உறுதித்தன்மை சான்றிதழ், இரு மாநில பொதுத்தேர்வு பாடத்திட்டமும் சமம் என்ற சமநிலை சான்றிதழ் கேட்பதாக புகார் வந்தது. இதை தொடர்ந்து முதன்மைக் கல்வி அலுவலர் பாலுமுத்து விசாரணை நடத்தி மாணவியிடம் வழக்கமான சான்றிதழ்களுடன் கூடுதலாக மைக்ரேஷன் சர்டிபிகேட் மட்டும் பெற்றுக்கொண்டு அட்மிஷன் வழங்க உத்தரவிட்டார்.
அவர் தெரிவித்ததாவது: வெளிமாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் இங்குள்ள பள்ளிகளில் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளிலும், கல்லுாரிகளிலும் சேர வழக்கமான கல்வி சான்றிதழ்களுடன் மைக்ரேஷன் சர்டிபிகேட் என்னும் இடம்பெயர்வு சான்றிதழ் மட்டும் கொடுத்தால் போதும். அச்சான்றிதழை கொண்டு வராதவர்களை மீண்டும் வாங்கிவரச்செய்து அட்மிஷன் போட வலியுறுத்தி உள்ளோம். மற்றபடி உறுதித் தன்மை சான்றிதழ் அவர்கள் வாங்கி வர தேவையில்லை, மேலும் 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்களை பள்ளியில் சேர்க்க எந்த சான்றிதழும் தேவை இல்லை, என்றார்.