
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: அரசு பள்ளி மாணவர்களுக்கு சென்னையில் கலை பண்பாட்டு மற்றும் விளையாட்டுப்போட்டி ஏப்.5ல் நடந்தது.
போட்டியில் காஞ்சிரங்கால் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 2ம் வகுப்பு மாணவி ஜெய்னிகாஸ்ரீ பங்கேற்றார். மாநில அளவில் கதை சொல்லுதல் போட்டியில் முதல் இடம் பிடித்தார். மாணவிக்கு பள்ளியில் பாராட்டு விழா நடந்தது.
மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மாரிமுத்து தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் பாண்டிராணி வரவேற்றார். ஆசிரியர் ஹேமலதா, வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரூபா கலந்து கொண்டனர். ஆசிரியர் வேதவள்ளி நன்றி கூறினார்.