ADDED : மார் 22, 2024 04:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை சி.எஸ்.ஐ., உயர்நிலை பள்ளி மைதானத்திற்கு அருகில் குவித்து வைக்கப்பட்டிருந்த சவடு மணலை அங்கிருந்து அரசு அனுமதி இல்லாமல் மற்றொரு இடத்திற்கு லாரியில் எடுத்து சென்றனர்.
மானாமதுரை போலீசார் லாரியை பிடித்து போலீஸ் ஸ்டேஷன் கொண்டு சென்றனர். லாரி டிரைவர்கள் ஜெயபாண்டியன், சக்திகுமார் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து லாரி மற்றும் மண் அள்ளும் இயந்திரத்தை பறிமுதல் செய்தனர்.

