
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: மானகிரி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது. பள்ளி முதல்வர் உஷா குமாரி வரவேற்றார். பள்ளி சேர்மன் பி.குமரேசன் தலைமையேற்றார்.
ஐ.என்.எஸ்., கமாண்டர் வினோத் விழாவை தொடங்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல ஆலோசகர் ரமேஷ் கண்ணன் பங்கேற்றார். மாணவர்களின் அணிவகுப்பு மரியாதை நடந்தது. உடற்பயிற்சி நடனம், யோகா, ஏரோபிக்ஸ், பிரமிடு மற்றும் சிலம்பம் உள்ளிட்டவற்றில் மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், பதக்கங்கள் வழங்கப்பட்டது. துணை சேர்மன் அருண்குமார் வாழ்த்தினார்.