/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தண்ணீர் தொட்டியைசுத்தம் செய்த மாணவர்கள்
/
தண்ணீர் தொட்டியைசுத்தம் செய்த மாணவர்கள்
ADDED : ஜூன் 13, 2024 06:15 AM

சிவகங்கை: சிவகங்கை அருகே குமாரபட்டி அரசு உயர்நிலை பள்ளியில் ஆபத்தான முறையில் மாணவர்களை வைத்து தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணி நடந்துள்ளது.
இங்குள்ள உயர்நிலை பள்ளியில் 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். கோடை விடுமுறை முடிந்து தற்போது பள்ளி திறக்கப்பட்டு வகுப்பு நடந்து வருகிறது. குமாரபட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களை வைத்து தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்துள்ளனர்.பாதுகாப்பு இல்லாத நிலையில் தொட்டி மீது ஏறி இந்த பணியை செய்யும் போது விபத்து நடந்தால் யார் பொறுப்பேற்பது என்ற கேள்வியை பெற்றோர் எழுப்புகின்றனர்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து கூறுகையில், இது குறித்து அந்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் விசாரிக்கிறோம். மாணவர்களிடமும் விசாரித்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.