/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
100 நாள் வேலைத்திட்டம் நிறுத்தம்
/
100 நாள் வேலைத்திட்டம் நிறுத்தம்
ADDED : மார் 28, 2024 11:23 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி : தமிழகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் சில நாட்களாக 'கட்' செய்யப்பட்டுள்ளது.
மூன்று மாதங்களாக இத்திட்ட பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படாமல் இருந்த நிலையில் திடீரென்று மாநிலம் முழுவதும் திட்டப் பணிகள் நிறுத்தப்பட்டது. நிதியாண்டுக்கான இலக்கை அடைந்து விட்டதாக கூறப்பட்டாலும் இதுவரை திட்டம் நிறுத்தப்பட்டது இல்லை. ஆனால் இந்த முறை இலக்கு முடிக்கப்பட்டதாக கூறி திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. இனி ஏப்ரலுக்கு பிறகு தான் திட்டம் தொடங்கப்படும் என அறிவித்துள்ளனர்.

