/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கல்லுவழியில் 1000 பலா மரங்கள்; தினமும் ஒரு டன் பழம் அறுவடை
/
கல்லுவழியில் 1000 பலா மரங்கள்; தினமும் ஒரு டன் பழம் அறுவடை
கல்லுவழியில் 1000 பலா மரங்கள்; தினமும் ஒரு டன் பழம் அறுவடை
கல்லுவழியில் 1000 பலா மரங்கள்; தினமும் ஒரு டன் பழம் அறுவடை
ADDED : மே 31, 2024 06:19 AM

காளையார்கோவில் : காளையார்கோவில் அருகே கல்லுவழி கிராமத்தில் 40 ஏக்கரில் நடவு செய்த 1000 பலா மரத்தில்தினமும் ஒரு டன் பழம் பறித்து விற்பனை செய்யப்படுகிறது.
காளையார்கோவில் அருகே கல்லுவழி விவசாயி ஆபிரகாம். இவர் ஆயிரம் ஏக்கர் நிலத்தில் தென்னை, கொய்யா, மா, பலா என பலன் தரும் மரங்களை வளர்த்து வருகிறார்.
குறிப்பாக 40 ஏக்கரில் மட்டுமே சிங்கப்பூர் ரகம், நாட்டு ரகம் என 1000 பலா மரங்களை சொட்டு நீர் பாசனம் மூலம் வளர்த்து வருகிறார். இவற்றிற்கு ரசாயன உரமின்றி, முற்றிலும் இயற்கை உரங்களையே பயன்படுத்தி வருகிறார்.
ஆண்டுதோறும் ஏப்., மாதத்தில் இருந்து ஜூலை வரை பலா பழத்தை அறுவடை செய்து வெளியூர்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வருகிறார். இவரிடம் வியாபாரிகள் பலா பழம் கிலோவிற்கு ரூ.25 செலுத்தி வாங்கி செல்கின்றனர்.
கல்லுவழி விலக்கில் பலா பழத்தை விற்பனை செய்து வரும் இவர் மக்களுக்கு கிலோ ரூ.30க்கு வழங்குகிறார்.