/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கண்டுபட்டியில் 1008 விளக்கு பூஜை
/
கண்டுபட்டியில் 1008 விளக்கு பூஜை
ADDED : ஜூன் 27, 2024 05:35 AM

சிவகங்கை, : சிவகங்கை அருகே கண்டுபட்டியில் ஹிந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள குடியிருப்பு காளியம்மன் கோயிலில் ஜூன் 19ம் தேதி அம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் பூச்சொரிதல் விழா துவங்கியது.தினமும் சுவாமி அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது.
நேற்று முன்தினம் மாலை நல்ல மழை பெய்து, விவசாயம் செழிக்க வேண்டி கோயில் மண்டபத்தில் 1008 திருவிளக்கு பூஜை நடந்தது.
இதில் கண்டுபட்டி, நாட்டரசன்கோட்டை, கல்லல், பனங்குடி உட்படசுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பெண்கள் திருவிளக்கு பூஜையை நடத்தினர். விழாவை முன்னிட்டு அம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம், நவ திரவிய அபிேஷகம் நடைபெற்றது.
விழா ஏற்பாட்டை கிராம மக்களும், ஹிந்து அறநிலைய அதிகாரிகளும் செய்திருந்தனர்.