/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் பழுதால் நோயாளிகள் அவதி
/
அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் பழுதால் நோயாளிகள் அவதி
அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் பழுதால் நோயாளிகள் அவதி
அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் பழுதால் நோயாளிகள் அவதி
ADDED : மே 29, 2024 05:07 AM

இளையான்குடி : இளையான்குடி அரசு மருத்துவமனையில் உள்ள 108 ஆம்புலன்ஸ்களில் ஒன்று பழுதானதால் மற்றொரு வாகனத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களை அழைத்துச் செல்வதால் நோயாளிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
இளையான்குடி அரசு மருத்துவமனைக்கு இளையான்குடி, சூராணம், முனைவென்றி சாலைக்கிராமம் உள்ளிட்ட 55 ஊராட்சிகளை சேர்ந்த 150க்கு மேற்பட்ட கிராம மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
தினந்தோறும் 400க்கும் மேற்பட்ட வெளி நோயாளிகளும், 25க்கும் மேற்பட்ட உள் நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இளையான்குடி அரசு மருத்துவமனையில் உள்ள இரண்டு 108 ஆம்புலன்சில் ஒன்று பழுதாகி விட்டதால் ஒரு ஆம்புலன்ஸ் மட்டுமே இயங்கி வருகிறது.
ஒரே நேரத்தில் 2க்கும் மேற்பட்ட அவசர சிகிச்சை நோயாளிகள் வரும் நிலையில் அவர்களை மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனை மற்றும் மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்வதில் பிரச்னை ஏற்படுகிறது. சில நேரங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட நோயாளிகளை 108 ஆம்புலன்ஸில் ஏற்றிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. மாவட்ட நிர்வாகம் இளையான்குடி அரசு மருத்துவமனையில் பழுதாகி கிடக்கும் மற்றொரு 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை விரைவாக பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.