/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இளையான்குடி அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் பழுதால் நோயாளிகள் அவதி
/
இளையான்குடி அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் பழுதால் நோயாளிகள் அவதி
இளையான்குடி அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் பழுதால் நோயாளிகள் அவதி
இளையான்குடி அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் பழுதால் நோயாளிகள் அவதி
ADDED : ஜூன் 21, 2024 04:19 AM

இளையான்குடி: இளையான்குடி அரசு மருத்துவமனையில் பயன்பாட்டில் இருந்த 2 ஆம்புலன்ஸ்களில் ஒன்று பழுதானதால் நோயாளிகளை சிகிச்சைக்காக அழைத்துச் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இளையான்குடி அரசு மருத்துவமனைக்கு இளையான்குடி, சூராணம், முனைவென்றி, சாலைக்கிராமம் உள்ளிட்ட 55 ஊராட்சிகளை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
இளையான்குடி அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் பயன்பாட்டிற்காக இரண்டு 108 ஆம்புலன்ஸ் இருந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன் ஒரு ஆம்புலன்ஸ் பழுதானதை தொடர்ந்து அந்த ஆம்புலன்சை சரி செய்வதற்காக சிவகங்கை கொண்டு சென்ற நிலையில் பழுது நீக்கி அதனை மீண்டும்இளையான்குடிக்கு கொண்டு வரவில்லை.
இந்நிலையில் இருக்கும்ஒரு ஆம்புலன்சில் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை, மதுரை அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்வதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சி செய்தி தொடர்பாளர் மனோஜ் கூறியதாவது:
இளையான்குடி அரசு மருத்துவமனையில் பயன்பாட்டில் இருந்த 2 ஆம்புலன்ஸ்களில் ஒன்று பழுதானது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு தினமலர்நாளிதழில் செய்தி வெளியானதைதொடர்ந்து பழுதான ஆம்புலன்ஸ்க்கு பதிலாக மற்றொரு ஆம்புலன்ஸ் இளையான்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. அந்த ஆம்புலன்ஸ் 3நாட்கள் மட்டுமே இளையான்குடியில் இருந்தது.பின்னர் வேறு ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.
மாவட்ட நிர்வாகம் உடனடியாக பழுதான 108 ஆம்புலன்சை பழுது நீக்கி இளையான்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வர வேண்டும் என்றார்.