ADDED : மே 25, 2026 06:01 PM
சிவகங்கை,மே 26-
சிவகங்கை மாவட்டத்தில் போலி நம்பர் பிளேட்களை பொருத்தி குற்றச்செயல்களில் சிலர் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டு உரிய ஆவணங்கள் இல்லாத டூவீலர்களை பறிமுதல் செய்ய மாவட்ட எஸ்.பி., சிவபிரசாத் உத்தரவிட்டார். அதன் பேரில் நேற்று முன்தினம் சிவகங்கை மாவட்டம் முழுவதும் சட்ட ஒழுங்கு, போக்குவரத்து, குற்றப்பிரிவு போலீசார் வகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் உரிய ஆவணங்கள் இல்லாமலும், முறையான நம்பர் பிளேட் இல்லாத வாகனங்கள் என 110 வாகனங்களை பறிமுதல் செய்தனர். சிவகங்கை நகரில் மட்டும் 15 வாகனங்கள் நகர் போலீசார் பறிமுதல் செய்தனர். உரிய ஆவணங்களை காண்பித்துவிட்டு டூவீலரை எடுத்துச்செல்லுமாறு அறிவுறுத்தி பறிமுதல் செய்யப்பட்ட டூவீலரை அந்தந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர்.
