/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
செப்., 14ல் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வு; 43 மையங்களில் 13,260 பேர் பங்கேற்பு
/
செப்., 14ல் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வு; 43 மையங்களில் 13,260 பேர் பங்கேற்பு
செப்., 14ல் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வு; 43 மையங்களில் 13,260 பேர் பங்கேற்பு
செப்., 14ல் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வு; 43 மையங்களில் 13,260 பேர் பங்கேற்பு
ADDED : செப் 05, 2024 05:12 AM
சிவகங்கை : டி.என்.பி.எஸ்.சி.,குரூப் 2- நிலையில் உள்ள 2,327 காலிபணியிடத்திற்கான முதல்நிலை எழுத்து தேர்வினை சிவகங்கையில் செப்.,14 அன்று 43 மையங்களில் 13,260 பேர் எழுத உள்ளனர்.
டி.என்.பி.எஸ்.சி.,குரூப் 2 மற்றும் 2 ஏ நிலையில் காலியாக உள்ள 2,327 காலி பணியிடங்களுக்கு, பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்றது. விண்ணப்பித்த பட்டதாரிகளுக்கு செப்., 14 அன்று காலை 9:30 முதல் மதியம் 12:30 மணி வரை முதல்நிலை எழுத்து தேர்வு நடைபெற உள்ளது. இதில் பொது அறிவு, அப்டிடியூட் மற்றும் மனத்திறன் தேர்வு, பொது தமிழ் அல்லது ஆங்கிலம் போன்றவற்றில் இருந்து 200 வினாக்கள் கேட்கப்படும்.
இதற்கு 300 மதிப்பெண் வழங்கப்பட உள்ளது. டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வினை எழுத சிவகங்கை மாவட்டத்தில் 13,260 பேர் தகுதி பெற்றுள்ளனர். இவர்களுக்கென சிவகங்கையில் 22, காரைக்குடியில் 16, தேவகோட்டையில் 5 மையங்கள் என 43 மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது. தேர்வு மையத்திற்கு தேர்வு அன்று காலை 9:00 மணிக்குள் வந்து விட வேண்டும்.
தேர்வு மையத்தில் உள்ள அறையில் 20 தேர்வர்களுக்கு ஒரு தேர்வு அறை கண்காணிப்பாளர் வீதம் நியமிக்கப்படுவர். தேர்வுகளை கண்காணிக்க சிவகங்கை, காரைக்குடிக்கு தலா 2, தேவகோட்டைக்கு 1 குழு வீதம் பறக்கும் படை நியமிக்கப்படும். ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் தலா ஒரு வீடியோ கிராபர், வினாத்தாள் கட்டு எடுத்துவரும் 3 கருவூலகத்தில் தலா 1 வீடியோ கேமராக்கள் வீதம் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படும்.
கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில், கோட்டாட்சியர், துணை கலெக்டர்கள் தேர்வு பணிகளை கண்காணிப்பார்கள்.