/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் 18 சுயேச்சைகள் காங்., - பா.ஜ.,- அ.தி.மு.க., வியூகம்
/
சிவகங்கையில் 18 சுயேச்சைகள் காங்., - பா.ஜ.,- அ.தி.மு.க., வியூகம்
சிவகங்கையில் 18 சுயேச்சைகள் காங்., - பா.ஜ.,- அ.தி.மு.க., வியூகம்
சிவகங்கையில் 18 சுயேச்சைகள் காங்., - பா.ஜ.,- அ.தி.மு.க., வியூகம்
ADDED : மார் 28, 2024 05:41 AM
சிவகங்கை: சிவகங்கை தொகுதியில் நேற்று ஒரே நாளில் 13 பேர் சுயேச்சையாக மனு தாக்கல் செய்துள்ளனர். கட்சி வேட்பாளர்கள் 10 மனுக்கள் தாக்கல் செய்த நிலையில், சுயேச்சைகள் மட்டுமே 18 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இத்தொகுதியில் போட்டியிட பா.ஜ.,-வில் தேவநாதன், காங்.,- ல் கார்த்தி எம்.பி., அ.தி.மு.க.,-வில் சேவியர்தாஸ், நாம் தமிழர் கட்சியில் எழிலரசி, பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ரஞ்சித் குமார் உள்ளிட்டோர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு மாற்று வேட்பாளர்களும், காங்., - அ.தி.மு.க.,- பா.ஜ., வேட்பாளர்கள் 2 முதல் 3 வேட்பு மனுக்கள் வரை தாக்கல் செய்துள்ளனர்.
மார்ச் 25 அன்று தேசிய, மாநில கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மார்ச் 26ல் நாம் தமிழர் உள்ளிட்ட சுயேச்சைகள் தாக்கல் செய்தனர்.
நேற்று ஒரே நாளில் 15 பேர் வேட்பு மனுக்களை கலெக்டரிடம் தாக்கல் செய்தனர்.
இதில், சுயேச்சையாக நேற்று ஒரே நாளில் 13 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தது தான், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று வரை தேசிய, மாநில கட்சிகள், சுயேச்சைகள் என 28 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். கடைசி நாளில் குவிந்த சுயேச்சை:வேட்பு மனு தாக்கல் கடைசி நாளான நேற்று கட்சியினர் 3 பேர், சுயேச்சைகள் என ஒரே நாளில் 15 பேர் மனு தாக்கல் செய்ய வந்திருந்தனர்.
தேர்தல் பார்வையாளர் எஸ்.ஹரீஸ் முன்னிலையில், கலெக்டர் ஆஷா அஜித் மதியம் 3:00 வரை அனைத்து வேட்பாளர்களையும் அனுமதித்து, வேட்பு மனுக்களை பெற்ற பின்னரே மாலை 4:15 மணிக்கு முடித்து சென்றனர்.