sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

குழந்தை திருமணம் நடத்தினால்  2 ஆண்டு சிறை, ரூ.1 லட்சம் அபராதம் கலெக்டர் தகவல் 

/

குழந்தை திருமணம் நடத்தினால்  2 ஆண்டு சிறை, ரூ.1 லட்சம் அபராதம் கலெக்டர் தகவல் 

குழந்தை திருமணம் நடத்தினால்  2 ஆண்டு சிறை, ரூ.1 லட்சம் அபராதம் கலெக்டர் தகவல் 

குழந்தை திருமணம் நடத்தினால்  2 ஆண்டு சிறை, ரூ.1 லட்சம் அபராதம் கலெக்டர் தகவல் 


ADDED : ஜூன் 27, 2024 04:21 AM

Google News

ADDED : ஜூன் 27, 2024 04:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் விதிகளை மீறி குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைத்தால், 2 ஆண்டு சிறை, ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என கலெக்டர் ஆஷா அஜித் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவர் கூறியதாவது:

குழந்தை திருமணம், அவர்களின் குழந்தை பருவத்தை பறித்து, நல்வாழ்வை அச்சுறுத்தும் செயல். இளம் வயது கர்ப்பத்தால் மகப்பேறு காலத்தில் குழந்தை அல்லதுதாய் இறப்பது போன்ற சம்பவங்கள் நடக்கிறது. இல்லாவிடில் குழந்தை ஊனமாக பிறத்தல், உள்ளுறுப்பு பாதிப்பு, கல்வி தடைபடும்.

எனவே பெண் குழந்தைகளுக்கு 18 வயதும், ஆணுக்கு 21 வயதும் பூர்த்தி அடையாமல் திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றமாகும்.

குழந்தை திருமண தடை சட்டம் என்பது குழந்தை திருமணத்தை தடுத்தல், பாதிக்கப்பட்ட குழந்தையை பாதுகாப்பது, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தருவதாகும். குழந்தை திருமணங்களை நடத்தி வைப்போருக்கு விதிப்படி 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும்.

மேலும், திருமண மண்டப உரிமையாளர், கோயில் அதிகாரிகள் மண்டபம், கோயிலில் திருமணம் நடைபெற்றால், அம் மணப்பெண்ணிற்கு 18 வயது பூர்த்தியானதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். குழந்தை திருமணம் நடப்பதாக தகவல் கிடைத்தால் 1098 மற்றும் 181 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம், என்றார்.






      Dinamalar
      Follow us