ADDED : ஜூன் 27, 2024 05:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி, : சாக்கோட்டையில் உள்ள சாக்கை வீரசேகர உமையாம்பிகை கோயில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடந்தது.
சிவகங்கை சமஸ்தானம், தேவஸ்தானம் சாக்கை வீரசேகர உமையாம்பிகை கோயில், ஆனித் திருவிழா கடந்த ஜூன் 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஜூன் 27ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் மாலை தேரோட்டம்நடந்தது.
நேற்று காலை மஞ்சுவிரட்டு நடந்தது. இதில் சிவகங்கை புதுக்கோட்டை ராமநாதபுரம் உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு காளைகள் விடப்பட்டன. காளைகளை வீரர்கள் ஆர்வத்துடன் பிடித்தனர்.
மாடு பிடி வீரர்கள் மற்றும் வேடிக்கை பார்த்த பெண் உட்பட 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.