/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சமுதாயக்கூடத்தில் வைக்கப்பட்டிருந்த 200 மூடை பிளீச்சிங் பவுடர் எரிந்தது

ADDED : மார் 05, 2025 06:25 AM

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே சமுதாயக் கூடத்தில் வைக்கப்பட்டிருந்த 200 மூடை பிளீச்சிங் மற்றும் சுண்ணாம்பு பவுடர் தீயில் எரிந்தது.
இவ்வொன்றியத்தில் அனைத்து ஊராட்சிகளுக்கும் துாய்மை பணிக்கு சப்ளை செய்வதற்காக தனியார் ஏஜன்சி சார்பில் தலா 25 கிலோ எடை கொண்ட 100 மூடை ப்ளீச்சிங் பவுடர், 100 மூடை சுண்ணாம்பு துாள் ஆகியவை மேலப்பட்டி சமுதாயக்கூடத்தில் வைக்கப்பட்டிருந்தது. நேற்று மதியம் இவற்றில் தீப்பற்றி எரியத் தொடங்கியது. பாலிதீன் பை மூடை என்பதால் தீ கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு எரிந்து அனைத்தும் சாம்பலாயின. சுண்ணாம்பு தூள் கொப்பளித்து எரிந்தன. சிங்கம்புணரி தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்த போராடினர். தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. சிங்கம்புணரி தாசில்தார் பரிமளம் தீ விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்தார்.