ADDED : மே 12, 2024 01:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை:மாவட்டத்தில் நேற்று இளையான்குடியில் அதிகபட்சமாக 22 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.
கோடை வெயிலின் தாக்கத்தால், மக்கள் தவித்து வந்தனர். மேலும் அக்னி நட்சத்திர வெயிலால் பெரிதும் தவித்தனர். இந்நிலையில் மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதத்தில் கடந்த 2 நாட்களாக கோடை மழை பெய்ய துவங்கியுள்ளது.
மேகமூட்டத்துடன் காணப்பட்டு, ஆங்காங்கே லேசான மழை பெய்து வருகிறது. மாவட்ட அளவில் அதிகபட்சமாக இளையான்குடியில் 22 மி.மீ., பதிவாகியுள்ளன.
அடுத்தபடியாக மானாமதுரையில் 13 மி.மீ., மழை பதிவாகின. மற்ற தாலுகாவில் மழை பதிவாகவில்லை. ஒட்டுமொத்தமாக ஒரே நாளில் 35 மி.மீ., மழை பெய்து, சராசரியாக 3.89 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.