/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
2,500 ஆண்டுக்கு முந்தைய கல்வட்டம் கண்டெடுப்பு
/
2,500 ஆண்டுக்கு முந்தைய கல்வட்டம் கண்டெடுப்பு
ADDED : ஜூலை 17, 2024 09:21 PM

சிவகங்கை:காரைக்குடி வரலாற்று ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், ரமேஷ் உள்ளிட்டோர் சிவகங்கை மாவட்டம், மறவமங்கலம் அருகே புதுக்குடியிருப்பு கண்மாயில் இரண்டு அடுக்கு உள்ள கல்வட்டத்தை கண்டறிந்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:
இது, பெருங்கற்கால ஈமச்சின்னம். இறந்தவர்கள் உடலை வைத்து மேற்பரப்பில் கருங்கற்களை வட்டமாக அடுக்கியுள்ளனர். இதன் அருகில் 200 மீட்டர் துாரத்தில் தட்டை வடிவ கல்வட்டம் உள்ளது. இதன் சுற்றளவு 15 மீட்டர்.
இதனால், 2,500 முதல், 3,500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்களின் கலாசாரத்தை அறியலாம். இது பெருங்கற்காலத்தின் அடையாளமாகும். ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா கண்டங்களில் ஒரே மாதிரியான பண்பாடு, கலாசாரம் குறித்து இந்த கல்வட்டம் மூலம் அறியலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.