/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மன்னர் துரைசிங்கம் அரசு கல்லுாரியில் ஜூன் 24 முதல் 2ம் கட்ட கவுன்சிலிங்
/
மன்னர் துரைசிங்கம் அரசு கல்லுாரியில் ஜூன் 24 முதல் 2ம் கட்ட கவுன்சிலிங்
மன்னர் துரைசிங்கம் அரசு கல்லுாரியில் ஜூன் 24 முதல் 2ம் கட்ட கவுன்சிலிங்
மன்னர் துரைசிங்கம் அரசு கல்லுாரியில் ஜூன் 24 முதல் 2ம் கட்ட கவுன்சிலிங்
ADDED : ஜூன் 21, 2024 04:21 AM
சிவகங்கை: சிவகங்கை மன்னர்துரைசிங்கம் அரசு கல்லுாரியில் 2ம் கட்ட கவுன்சிலிங் ஜூன் 24 முதல் நடைபெறும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
இக்கல்வி ஆண்டிற்கானஇளங்கலை பட்டப்படிப்பில் சேர்வதற்கான முதற்கட்ட கவுன்சிலிங் ஜூன் 10 முதல் 14 வரை நடைபெற்றது.
இரண்டாம் கட்ட கவுன்சிலிங் ஜூன் 24ல் ஆங்கிலத்தில் 49 முதல் 35 மதிப்பெண் வரை பெற்றவர்களுக்கும், இரண்டாவது ஷிப்டில் சேர தமிழில் விண்ணப்பித்தவர்கள் தமிழில் 59 முதல் 35 மதிப்பெண் வரை பெற்றவர்களுக்கும், ஜூன் 25ம் தேதி தமிழ் மற்றும் ஆங்கில பாடப்பிரிவு தவிர்த்து மற்ற பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பித்து இடம் கிடைக்காத அனைத்து மாணவர்களுக்கும் மற்றும்ஜூன் 26ல் காலியிடங்களுக்கு ஏற்ப தமிழ், ஆங்கிலம் உட்பட அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் கவுன்சிலிங் நடைபெறும்.
கவுன்சிலிங் வரும் மாணவர்கள் காலை 9:00 மணிக்கு முன் கல்லுாரிக்குள் வரவேண்டும். விண்ணப்பத்துடன், மாற்று சான்று, 10, பிளஸ் 1 மற்றும்பிளஸ் 2 மதிப்பெண் சான்று, ஜாதி சான்று, ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தக நகலுடன் பங்கேற்க வேண்டும்.
காலியிட விபரத்தை www.rdgacollege.in இணையதளத்தில் பார்க்கலாம், என்றார். முதல்வர் துரையரசன் உள்ளிட்ட பேராசிரியர்கள் கவுன்சிலிங் ஏற்பாடுகளை செய்கின்றனர்.
* சிவகங்கை அரசு மகளிர் கலைக்கல்லுாரி முதல்வர் இந்திரா கூறுகையில், சிவகங்கை அரசு மகளிர் கலைக் கல்லுாரியில் ஜூன் 24 அன்று இயற்பியல், வேதியியல், கணிதம், கணினி அறிவியல், தாவரவியல், விலங்கியல், மனையியல் உள்ளிட்ட அறிவியல் பாடப்பிரிவுகளுக்கும், ஜூன் 25ம் தேதி பி.பி.ஏ., வணிகவியல், வரலாறு, பொருளியல், தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கும் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெறும்.
மேலும் விபரங்களுக்கு http://gacwsvga.edu.in என்ற வலைதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என்றார்.