/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பஸ்சில் திருட முயற்சி3 பெண்கள் கைது
/
பஸ்சில் திருட முயற்சி3 பெண்கள் கைது
ADDED : செப் 06, 2024 05:00 AM
சிவகங்கை; சிவகங்கை அருகே குமாரப்பட்டியை சேர்ந்தவர் போஸ் மனைவி பெரிய நாயகி 52. இவர் நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு சிவகங்கையில் இருந்து குமாரப்பட்டிக்கு செல்வதற்காக தமறாக்கி டவுன் பஸ்சில் சென்றார்.
பஸ் காமராஜர் காலனி அருகே சென்றது. அப்போது துாத்துக்குடி மாவட்டம் கோவில் பட்டி அருகேயுள்ள மந்திதோப்பு சுரேஷ் மனைவி மாரி 38, அருப்புக்கோட்டை அருண்பாண்டி மனைவி அனிதா 30, சாத்துார் சத்யராஜ் மனைவி ரஞ்சிதா 29 ஆகியோர் பெரியநாயகி கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க செயினை பறித்துள்ளனர்.
பெரியநாயகி சப்தம் போடவும் பஸ் டிரைவர் பஸ்சை எஸ்.பி., முகாம் அலுவலகத்தின் அருகில் நிறுத்திவிட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சிவகங்கை குற்றப்பிரிவு போலீசார் மாரி, அனிதா, ரஞ்சிதாவை கைது செய்தனர்.