ADDED : மே 01, 2024 07:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எஸ்.புதுார் : எஸ்.புதுார் அருகே அனுமதியின்றி நடந்த மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 30 பேர் காயமடைந்தனர்.
கட்டுக்குடிப்பட்டி மகாமாரியம்மன் கோயில் பூத்திருவிழாவை முன்னிட்டு நேற்று பெரியகண்மாயில் மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது.
இதில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. அனைத்து காளைகளுக்கும் கிராமத்தினர் சார்பில் மரியாதை செய்யப்பட்டது.
இம்மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 30 பேர் காயமடைந்தனர்.
அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடந்ததாக மணலூர் வி.ஏ.ஓ., அளித்த புகாரில் கட்டுக்குடிப்பட்டியை சேர்ந்த கணேசன், முத்துராமலிங்கம், சந்திரசேகர், அழகர்சாமி, செந்தில்குமார் ஆகியோர் மீது உலகம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.