/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இலவச "டிவி' திட்டத்தில் பல லட்ச ரூபாய் சுருட்டல் : வி.ஏ.ஓ., சங்கம் குற்றச்சாட்டு
/
இலவச "டிவி' திட்டத்தில் பல லட்ச ரூபாய் சுருட்டல் : வி.ஏ.ஓ., சங்கம் குற்றச்சாட்டு
இலவச "டிவி' திட்டத்தில் பல லட்ச ரூபாய் சுருட்டல் : வி.ஏ.ஓ., சங்கம் குற்றச்சாட்டு
இலவச "டிவி' திட்டத்தில் பல லட்ச ரூபாய் சுருட்டல் : வி.ஏ.ஓ., சங்கம் குற்றச்சாட்டு
ADDED : ஜூலை 14, 2011 09:16 PM
சிவகங்கை : இலவச 'டிவி' வழங்கும் திட்டத்தில் வி.ஏ.ஓ.,க்களுக்கு கிடைக்க வேண்டிய ரூபாயை வருவாய்த்துறை அதிகாரிகள் முறைகேடு செய்துள்ளதாக முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு வி.ஏ.ஓ., சங்க மாநில கவுரவ தலைவர் போசு புகார் மனு அனுப்பியுள்ளார்.
தி.மு.க., அரசு கடந்த 2006ம் ஆண்டு முதல் ரேஷன் கார்டு உள்ள அனைவருக்கும் இலவச 'டிவி' வழங்கும் திட்டத்தை துவக்கியது.
1.64 கோடி கலர் 'டிவி' க்கள் பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது. அந்தந்த பகுதி வி.ஏ.ஓ.,க்கள் மூலம் 'டிவி'க்கள் வழங்கப்பட்டது. தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க கவுரவத்தலைவர் போசு முதல்வரின் தனிப்பிரிவிற்கு அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: இலவச 'டிவி' வழங்கும் திட்டத்தில் முந்தைய அரசின் வழிகாட்டுதலின் படி பதிவேடு தயாரித்தல், டோக்கன் தயாரித்தல், வினியோகித்தல், 'டிவி' பெட்டிகளை இறக்கி வைத்தல், வினியோகம் செய்யப்படும் இடத்திற்கு எடுத்து செல்லுதல் உள்ளிட்டவைகளுக்காக 'டிவி' ஒன்றிற்கு ரூபாய் 25 வீதம் வி.ஏ.ஓ.,க்களுக்கு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.ஆனால் வி.ஏ.ஓ.,க்களுக்கு ஒரு ரூபாய் கூட வழங்கப்படவில்லை. இதற்காக ஒதுக்கப்பட்ட தொகை ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகையை அந்தந்த பகுதி வருவாய்த்துறை அதிகாரிகள் சுருட்டிக் கொண்டனர். தற்போதைய அரசு விசாரணை செய்து வி.ஏ.ஓ.,க்களுக்கு கிடைக்க வேண்டிய தொகை கிடைத்திட உதவ வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.