sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சிவகங்கை இரட்டை கொலை வழக்கில் 4 பேர் சரண்

/

சிவகங்கை இரட்டை கொலை வழக்கில் 4 பேர் சரண்

சிவகங்கை இரட்டை கொலை வழக்கில் 4 பேர் சரண்

சிவகங்கை இரட்டை கொலை வழக்கில் 4 பேர் சரண்


ADDED : ஜூலை 05, 2024 02:03 AM

Google News

ADDED : ஜூலை 05, 2024 02:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை:சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே கொல்லங்குடியில் நடந்த இரட்டை கொலை வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட 4 பேர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா நாச்சிகுளம் சரவணாநகர் பகுதியைச் சேர்ந்த ஆண்டிச்சாமி மகன்கள் ஜெயசூர்யா 24, சுபாஷ் 23. இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர்கள் சில மாதங்களாக சிவகங்கை ஓட்டலில் பணிபுரிந்தபோது நண்பர்களான அரண்மனை சிறுவயல் ராஜேஷ் 19, சாத்தரசன்பட்டி நவீன் 19, கிளுவச்சி அஜய் 20, ஆகியோருடன் இணைந்து கொல்லங்குடி அருகே கல்லணையில் தங்கி மஞ்சுவிரட்டு காளைகளை வளர்த்தனர்.

கடந்த வாரம் பனங்குடியில் நடந்த மஞ்சுவிரட்டில் இவர்கள் காளையை அவிழ்த்து விட்டனர். அதை பிடிப்பது தொடர்பாக புதுப்பட்டியை சேர்ந்த சக்தி மகன் மதன் 20, மற்றும் அவரது நண்பர்களுடன் இவர்களுக்கு பிரச்னை ஏற்பட்டது. இரண்டு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 10:30 மணிக்கு மதன் மற்றும் அவரது நண்பர்கள் கல்லணையில் தங்கியிருந்த ஜெயசூர்யா, சுபாஷ் ஆகியோரை தாக்கி கொலை செய்தனர். அங்கிருந்து தப்பிய ஜெயசூர்யா நண்பர்கள் ராஜேஷ், நவீன் காளையார்கோவில் போலீசாரிடம் தெரிவித்தனர்.

போலீசார் விசாரித்து இதில் ஈடுபட்ட சிவகங்கை மதுமதி 26, திவாகர் 23, சுந்தரநடப்பு சந்தோஷ் 23, நகரம்பட்டி ராம்ஜி 21, யுவராஜ் 22, ஒக்கூர் அபினேஷ் 22, மதகுபட்டி அருண்குமார் 30, ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கொலையில் தொடர்புடைய மதன் மற்றும் முத்துபாண்டி உள்ளிட்டோர் மதுமதி அலைபேசி மூலம் இன்ஸ்டாகிராமில் மற்றவர்களுடன் கொலைக்காக சதி திட்டம் தீட்டியது தெரிந்தது.

மதன், முத்துபாண்டி, சிவகங்கை முத்துக்கருப்பன் மகன் செல்வகுமார் 28, கார்த்திகேயராஜா மகன் மணிகண்டபிரபு 22, ஆகியோர் நேற்று வழக்கறிஞர் போல் உடை அணிந்து போலீஸ் கண்களில் சிக்காமல் சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் வந்தனர். பின் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இதில் தொடர்புடைய தர்ஷன், சஞ்சய் உள்ளிட்ட மூவரை போலீசார் தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us