ADDED : மே 26, 2024 04:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: கல்லல் அருகே உள்ள செம்பனுார் சேவுகப் பெருமாள் கோயில் திருவிழாவை முன்னிட்டு நேற்று வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது. இதில், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 17 மாடுகள் கலந்து கொண்டன. 153 வீரர்கள்
காளைகளை அடக்க களமிறங்கினர். இதில், 5 பேர் காயம் அடைந்தனர் முன்னதாக, போட்டியில் பங்கேற்ற மாடுகளுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்ற காளைகளுக்கும், வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.