ADDED : மே 10, 2024 04:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: நாட்டரசன்கோட்டை அருகே திருவேலங்குடி ரயில்வே கேட் அருகில் ராமநாதன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் விவசாயம் செய்து வருபவர் கோவிந்தன்.
இவருக்கு சொந்தமான 6 ஆடுகள் நேற்று மாலை 4:30 மணிக்கு பெய்த மழையில் மின்னல் தாக்கி பலியாயின. அருகில் வேலை பார்த்த கருங்கன் மனைவி, 60, மகள் சரளா 35 காயம் அடைந்தனர். சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.