ADDED : மார் 25, 2024 06:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை நிலையான கண்காணிப்பு குழு தாசில்தார் மைலாவதி தலைமையிலான குழு நேற்று மேலுார் ரோட்டில் சக்கந்தி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இடையமேலுாரை சேர்ந்த பிரியதர்ஷினி என்பவர் அந்தவழியாக டூவீலரில் வந்துள்ளார். அவரிடம் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் பிரியதர்ஷினியிடம் ரூ.95 ஆயிரத்து 500 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரித்தபோது பணத்தை மருத்துவ செலவிற்கு கொண்டு செல்வதாக கூறியுள்ளார். உரிய ஆவணங்களை காட்டி பணத்தை பெற்றுக் கொள்ள கூறி கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

