/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
9 நிமிடத்தில் 100 திருக்குறள் கூறி வாய்ப்பாடு எழுதிய சிறுமி
/
9 நிமிடத்தில் 100 திருக்குறள் கூறி வாய்ப்பாடு எழுதிய சிறுமி
9 நிமிடத்தில் 100 திருக்குறள் கூறி வாய்ப்பாடு எழுதிய சிறுமி
9 நிமிடத்தில் 100 திருக்குறள் கூறி வாய்ப்பாடு எழுதிய சிறுமி
ADDED : ஜூலை 11, 2024 05:08 AM

காரைக்குடி: காரைக்குடியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் சத்யா தம்பதி. இவர்களது மகள் ரிதமிகா 7. இவரது தாத்தா ராமதாஸ் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். பாட்டி சுகந்தி அரசுப் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
தாத்தாவும் பாட்டியும் பேத்திக்கு ஏற்படுத்திய ஆர்வம் காரணமாக சிறுமிக்கு திருக்குறளில் அதிக ஆர்வம் ஏற்பட்டது. பள்ளி ஆசிரியை ஒருவர் சிறுமியை உற்சாகப்படுத்தியுள்ளார். உற்சாகத்தின் காரணமாக சிறுமி திருக்குறளை கூறியபடியே வாய்ப்பாடுகளை எழுத தொடங்கினார். சிறுமியின் இந்த முயற்சி காரணமாக சென்னையில் கலாம் வேர்ல்டு ரெக்கார்டு அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது.
அதில், 9 நிமிடம் 10 வினாடியில் 100 திருக்குறளை கூறியபடியே 1 முதல் 10 வரையிலான வாய்ப்பாடுகளை எழுதி அனைவரின் பாராட்டுகளைப் பெற்றதோடு சாதனை படைத்துள்ளார்.சாதனையை பாராட்டி கலாம் வேர்ல்டு ரெக்கார்டு விருது வழங்கப்பட்டுள்ளது.