/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
விவசாயிகளுக்கு கைகொடுக்கும் நுங்கு
/
விவசாயிகளுக்கு கைகொடுக்கும் நுங்கு
ADDED : மே 06, 2024 12:28 AM

சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் விவசாயம் கை கொடுக்காமல் ஏமாற்றிய நிலையில் நொந்து போயிருக்கும் விவசாயிகளுக்கு நுங்கு விற்பனை கை கொடுத்து வருகிறது.
இத்தாலுகாவில் தென்னை, நெல், நிலக்கடலை விவசாயம் பரவலாக உள்ள நிலையில் கடந்தாண்டு மழை இல்லாமல் அனைத்து விவசாயமும் பாதிக்கப்பட்டது.
கோடை வெயில் வாட்டியெடுக்கும் நிலையில் நிலத்தடி நீர் குறைந்து தேங்காய் விளைச்சலும் குறைந்து வருகிறது. இதனால் பல விவசாயிகள் மனம் நொந்து போயுள்ளனர்.
அவர்களில் சிலருக்கு நுங்கு விளைச்சல் கை கொடுக்கும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. தங்கள் தோட்டங்களில் மட்டுமல்லாது வெளிப்புறங்களில் வளர்ந்துள்ள பனை மரங்களையும் குத்தகைக்கு எடுத்து நுங்குகளை வெட்டிக் கொண்டு வந்து சிங்கம்புணரி, காளாப்பூர், பிரான்மலை உள்ளிட்ட பகுதிகளில் விற்கின்றனர். இதன் மூலம் அவர்களுக்கு தற்காலிக வருவாய் கிடைக்கிறது.
கோடை வெயிலால் அவதிப்படும் பொது மக்களுக்கும் நுங்கு புத்துணர்ச்சி தரும் ஊட்டச்சத்து மிகுந்ததாக உள்ளது.
ரஜினி, விவசாயி வேங்கைப்பட்டி: தர்போது விவசாயம் சொல்லும்படியாக இல்லை. தென்னை மரங்கள் கூட காய்ந்து பலன் குறைந்து வருகிறது. கோடையில் நுங்கு நன்றாகவே விளைந்திருக்கிறது. ஒரு சுளை ஐந்து ரூபாய் வீதம் விற்கிறோம். போதுமான வருவாய் கிடைக்கிறது.