/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஏ.விளாக்குளத்தில் ஜூன் 25ல் மழை வேண்டி புரவி எடுப்பு
/
ஏ.விளாக்குளத்தில் ஜூன் 25ல் மழை வேண்டி புரவி எடுப்பு
ஏ.விளாக்குளத்தில் ஜூன் 25ல் மழை வேண்டி புரவி எடுப்பு
ஏ.விளாக்குளத்தில் ஜூன் 25ல் மழை வேண்டி புரவி எடுப்பு
ADDED : ஜூன் 19, 2024 04:57 AM
மானாமதுரை, : மானாமதுரை அருகே ஏ.விளாக்குளத்தில் மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி நிறைகுளத்து அய்யனார் கோயிலில் ஜூன் 25ம் தேதி புரவி எடுப்பு திருவிழா நடைபெற உள்ளது.
மானாமதுரை அருகே ஏ.விளாக்குளம் கிராமத்தில் உள்ள நிறைகுளத்து அய்யனார் கோயிலில் 2 வருடங்களுக்கு ஒருமுறை ஆனி மாதம் நடைபெறும் புரவி எடுப்பு திருவிழா, இந்த வருடம் வருகிற 25ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக ஏராளமானோர் கடந்த வாரம் முதல் காப்பு கட்டி விரதமிருந்து வருகின்றனர். மானாமதுரையில் ஏராளமான புரவிகள் மற்றும் சுவாமி சிலைகள், மனித உருவங்கள் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. பணிகள் முடிவு பெற்றவுடன் வருகிற 25ம் தேதி மாலை மேளதாளங்கள் முழங்க ஏராளமானோர் மானாமதுரையிலிருந்து புரவிகளையும், சுவாமி சிலைகளையும் தலைச்சுமையாக சுமந்து ஊர்வலமாக நடந்து சென்று நிறைகுளத்தை அய்யனார் கோயிலில் செலுத்த உள்ளனர். புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு கோயில் முன் தினமும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. ஜூன் 27ல் வடமஞ்சுவிரட்டு, 28ல் காலை 6:00 மணிக்கு மாட்டு வண்டி பந்தயம் நடக்கிறது.