/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பராமரிப்பு இல்லாத நான்கு வழிச்சாலை; விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
/
பராமரிப்பு இல்லாத நான்கு வழிச்சாலை; விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
பராமரிப்பு இல்லாத நான்கு வழிச்சாலை; விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
பராமரிப்பு இல்லாத நான்கு வழிச்சாலை; விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : ஜூன் 24, 2024 11:42 PM

திருப்புவனம்: மதுரை - பரமக்குடி நான்கு வழிச்சாலையில்போதிய பராமரிப்பு இல்லாததால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர்.
மதுரையில் இருந்து பரமக்குடி வரை நான்கு வழிச்சாலையும் அதன்பின் ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலை வரை தலா பத்து மீட்டர் அகலம் கொண்ட இருவழிச்சாலையும் அமைக்கப்பட்டுள்ளது.நான்கு வழிச்சாலையை பயன்படுத்தும் வாகனங்களுக்கு திருப்பாச்சேத்தி, போகலுார் ஆகிய இரு இடங்களில் டோல்கேட் அமைக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2018 முதல் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில் நான்கு வழிச்சாலையில் போதிய பராமரிப்பு செய்வது இல்லை. நான்கு வழிச்சாலையில் மணலுார் மேம்பாலம் இறங்கும் இடம் உள்ளிட்ட பல இடங்களில் ரோடு சேதமடைந்து பள்ளமாக மாறி வருகிறது.
இரவு நேரங்களில் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கி காயமடைந்து வருகின்றனர். சாலைகளில் பள்ளங்களால் விபத்து ஏற்படுவது ஒருபுறம் இருக்க பல இடங்களில் சாலைகளில் விரிசல் ஏற்பட்டு வருகின்றன.
நாளுக்கு நாள் விரிசல்அதிகரிப்பதால் டூவீலர்களில் செல்பவர்கள் அதில் சிக்கி தடுமாறி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். நான்கு வழிச்சாலையின் இரு வழித்தடங்களிலும் தலா 80 இடங்களில் ஒன்றரை அடி உயரமுள்ள மைல் கற்களும், 30 இடங்களில் இரண்டரை அடி உயரமுள்ள மைல்கற்களும் வைக்கப்பட்டு அதில் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தியில் ஊர் பெயர்களும் கி.மீ., தூரமும் குறிப்பிடப்பட்டுள்ளன.
ராமேஸ்வரத்திற்கு தினசரி வடமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்தமைல்கற்களில் தூரம் குறிப்பிடப்பட்டுள்ளது அவர்களுக்கு மிகவும் வசதியாக இருந்தது. நாளுக்கு நாள் பராமரிப்பு இன்றி மைல் கற்களை சுற்றிலும் செடிகள் வளர்ந்து விட்டதால் மைல் கற்கள் இருப்பதே தெரியவில்லை.இதனால் வெளிமாநில பக்தர்கள் சிரமத்திற்குஉள்ளாகி வருகின்றனர்.