ADDED : மே 04, 2024 05:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார்: திருப்புத்துார் பூமாயி அம்மன் கோயில் வசந்தப்பெருவிழா ஐந்தாம் நாள் விழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்தனர்.
இக்கோயிலில் ஏப்.29 ல் கொடியேற்றப்பட்டு காப்புக்கட்டி விழா துவங்கியது. தினசரி அம்பாள் அலங்காரத்தில் எழுந்தருளி திருக்குளம் பவனி வருகிறார். நேற்று ஐந்தாம் நாளை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்தனர். கோட்டைக்கருப்பர் கோயிலிலிருந்து பால்குடத்துடன் ஊர்வலமாக பக்தர்கள் புறப்பட்டு கோயில் வந்தனர்.
தொடர்ந்து மூலவர்,உற்ஸவ அம்மன்களுக்கு பாலாபிேஷகம் நடந்தது. பின்னர் சர்வ அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து நடந்த தீபாராதனையை பக்தர்கள் தரிசித்தனர். நாளை காலை பொங்கல் விழாவும், மே7 ல் அம்மன் ரத ஊர்வலமும், மே 8 ல் அம்மன் தெப்பத்திருவிழாவும் நடைபெறும்.