ADDED : ஜூன் 16, 2024 04:54 AM

சிவகங்கை: சிவகங்கையில் ஆடுவதை கூடம் செயல்படாததால் விரைவில் சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
சிவகங்கை நகராட்சியில் 27 வார்டுகளில் 6-0 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள ஒவ்வொரு தெருக்களிலும் இறைச்சி கடைகள் உள்ளன. இறைச்சி கடைகளில் வெட்டப்படும் ஒவ்வொரு ஆட்டையும் பரிசோதிக்க வேண்டும். இதற்காக தினசரி சந்தையில் உள்ள நகராட்சி ஆடு வதை கூடத்தில் ஆடுகளை பரிசோதித்து நோய் பாதித்துள்ளதா என்பதை பார்த்த பிறகு அதற்கு சீல் வைத்து வெட்டுவது வழக்கம். ஆனால் இந்த ஆடு வதை கூடத்தில் கட்டுமான பணி நடப்பதால் சிவகங்கை நகராட்சியில் பெரும்பாலான ஆட்டிறைச்சி கடைகளில் தெருக்களில் ஆடுகளை அறுப்பது தொடர்கிறது. கழிவுகளையும் ஆங்காங்கே விட்டு செல்கின்றனர். இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
நகராட்சி வதை கூடத்தை சீரமைத்து முறையாக பரிசோதனைக்கு பின் சீல் வைத்து இறைச்சி விற்பனை செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.