ADDED : மே 31, 2024 06:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை அருகே உள்ள நாட்டரசன்கோட்டையை சேர்ந்தவர் ராஜேந்திரன்.இவர் அரண்மனை வாசல் பகுதியில் பூக்கடை நடத்தி வருகிறார்.
நேற்று பூக்கடை அருகே ரோட்டோரம் டூவீலரை நிறுத்திவிட்டு பூ வியாபாரம் செய்தார். அவரது டூவீலரில் பாம்பு ஒன்று இருப்பதை கண்டு தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்தார். தீயணைப்பு வீரர்கள் டூவீலரில் இருந்த 4 அடி நீளமுள்ள பாம்பை பாதுகாப்பு உபகரணங்களை கொண்டு பிடித்தனர்.