/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
உயிர் பலி வாங்க காத்திருக்கும் தொட்டி
/
உயிர் பலி வாங்க காத்திருக்கும் தொட்டி
ADDED : மே 31, 2024 06:19 AM

மானாமதுரை : மானாமதுரை அருகே சங்கமங்கலத்தில் உயிர்பலி வாங்க காத்திருக்கும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியால் கிராம மக்கள் அச்சப்படுகின்றனர்.
மானாமதுரை அருகே கீழப்பசலை ஊராட்சிக்கு உட்பட்டது சங்கமங்கலம் கிராமம். இக்கிராமத்தில்500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் இவர்களின் குடிநீர் தேவைக்காக கீழப்பசலை அருகே உள்ள வைகை ஆற்றுப்பகுதியிலிருந்து போர்வெல் மூலம் தண்ணீர் உறிஞ்சப்பட்டு அங்கிருந்து குழாய் மூலம் சங்கமங்கலம் கிராமத்திற்கு கொண்டுவரப்பட்டு மேல்நிலை நீர் தேக்க தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்த நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு 20 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டதால் தொட்டியின் தூண்களில் சிமென்ட் பூச்சு உதிர்ந்து இடிந்து விழும் நிலையில் உள்ளதால் கிராம மக்கள் அச்சத்திற்குள்ளாகி வருகின்றனர்.
சேதமடைந்த தொட்டியை இடித்து விட்டு புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட வேண்டுமென்று கிராம மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறுகின்றனர்.