ADDED : ஆக 08, 2024 04:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார்: திருப்புத்துார் அருகே காரங்கன்பட்டியைச் சேர்ந்த வீரையா மகன் அருண்குமார் 26. பால் வியாபாரி.
இவர் நேற்று முன்தினம்இரவு பால் கேனுடன் டூவீலரில் சிங்கம்புணரி ரோட்டில் திருப்புத்துார் சென்றார். கே.வைரவன்பட்டி அருகே சென்ற போது எதிரே பிரான்மலைக்கு சென்ற அரசு பஸ்சில் நேருக்கு நேர் மோதினர். அதில் அருண்குமார் இறந்தார்.
இன்ஸ்பெக்டர் பெரியார் விசாரித்தார். கண்டவராயன்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.