ADDED : ஜூலை 31, 2024 05:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார் : திருப்புத்துார் புதுப்பட்டி முத்துமாரியம்மன் கோயில் ஆடிப்பூர உற்ஸவ திருவிழா நடந்தது. ஜூலை 22ந்தேதி முகூர்த்த கால் நடப்பட்டு 23 ந் தேதி காப்பு கட்டப்பட்டது. அன்று இரவு அம்மனுக்கு முளைப்பாரி போடும் நிகழ்ச்சி நடந்தது.
நேற்று காலை பக்தர்கள் முத்துமாரியம்மன் கோயிலில் இருந்து அம்மனுக்கு பால்குடம், பூத்தட்டு, கரகம், முளைப்பாரி எடுத்து வந்தனர். அம்மனுக்கு 16 வகை அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார்.