ADDED : ஆக 05, 2024 10:13 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை, - சிவகங்கை அருகே மேட்டுப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு மாணவர்களின் பெற்றோர்கள் கல்விச் சீர் வழங்கினர்.ஊராட்சி தலைவர் பிரவீனா கண்ணன் தலைமை வகித்தார்.
தலைமை ஆசிரியர் வசந்தமீனா, துணை தலைவர் பாண்டி முன்னிலை வகித்தனர். வட்டார கல்வி அலுவலர் வளர்மதி, ஆசிரியர் பயிற்றுனர் காளிராசா கலந்து கொண்டனர்.ஆசிரியர்களுக்கு சேலை, சேர், சில்வர் பானை, வாளி, நோட்டு புக், எழுது பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை பள்ளிக்கு சீராக கொண்டு வந்தனர்.உதவி தலைமை ஆசிரியர் ஆரோக்கிய கிரிஸ்டினா நன்றி கூறினார்.