/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தபால் நிலையங்களில் விபத்து காப்பீடு பதிவு; வார சிறப்பு முகாம்
/
தபால் நிலையங்களில் விபத்து காப்பீடு பதிவு; வார சிறப்பு முகாம்
தபால் நிலையங்களில் விபத்து காப்பீடு பதிவு; வார சிறப்பு முகாம்
தபால் நிலையங்களில் விபத்து காப்பீடு பதிவு; வார சிறப்பு முகாம்
ADDED : பிப் 27, 2025 12:59 AM
சிவகங்கை; தபால் நிலையத்தில் விபத்து காப்பீடு பதிவு வார சிறப்பு முகாம் பிப்., 28 வரை நடக்கிறது என சிவகங்கை கண்காணிப்பாளர் மாரியப்பன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, தபால் துறையின் மூலம் செயல்படும் விபத்து காப்பீடு திட்டம் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இதை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்க்கும் விதமாக விபத்து காப்பீடு பதிவு வாரம் பிப்., 28 வரை அனைத்து தபால் அலுவலகங்களில் நடைபெற்று வருகிறது. இதில் வயது 18 முதல் 65 க்கு உட்பட்ட அனைவரும் தங்களை இணைத்து கொள்ளலாம். இதற்கென ஆதார், அலைபேசி எண், வாரிசுதாரர்களின் விபரங்களுடன் வரவேண்டும்.
விபத்து காப்பீடு பிரீமிய தொகையாக ரூ.320க்கு காப்பீடு ரூ.5 லட்சம், ரூ.559 க்கு ரூ.10 லட்சம், ரூ.799 க்கு ரூ.15 லட்சம் என்ற திட்டத்தில் இணையலாம். தபால் துறையின் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, நியூ இந்தியா அஸ்சூரன்ஸ் கம்பெனி, பல தனியாருடன் இணைந்து டூவீலர், 4 சக்கர வாகன காப்பீடு, உடல் நல காப்பீடும் வழங்குகிறது. இத்திட்டத்தில் அனைவரும் சேர வேண்டும் என்ற நோக்கத்தில் அனைத்து தபால் நிலையங்களில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது, என்றார்.