/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தபால் நிலையங்களில் விபத்து காப்பீடு பதிவு சிறப்பு முகாம்; தபால் கண்காணிப்பாளர் தகவல்

ADDED : ஆக 13, 2024 11:15 PM
சிவகங்கை : தபால் நிலையங்களில் ரூ.520 செலுத்தி விபத்து காப்பீடு செய்து கொள்ளலாம் என சிவகங்கை கோட்ட கண்காணிப்பாளர் மாரியப்பன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: சிவகங்கை கோட்டத்தில் உள்ள இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி கணக்கின் மூலம் வயது 18 முதல் 65 வரை உள்ளவர்கள் ஆண்டுக்கு ரூ.520 பிரீமிய தொகை செலுத்தி, ரூ.10 லட்சத்திற்கான விபத்து காப்பீடு பெறலாம்.
ஆண்டுக்கு ரூ.750 செலுத்தினால், ரூ.15 லட்சத்திற்கான விபத்து காப்பீடு பெறலாம். அனைத்து தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்களும் விபத்து காப்பீடு மூலம் பயன் பெறலாம்.
இது தவிர அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடத்தி ஊழியர்களுக்கு விபத்து காப்பீடு வசதி ஏற்படுத்தி தரப்படும்.
இத்திட்டம் மூலம் ரூ.10 லட்சத்திற்கு விபத்து காப்பீடு, விபத்தால் ஏற்படும் மருத்துவ செலவு (ரூ.60 ஆயிரம் வரை), விபத்தில் மரணம், ஊனம், பக்கவாதம் ஏற்பட்டவரின் குழந்தைகளின் கல்வி செலவுக்கு ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும்.
விபத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.1000 வீதம் 10 நாட்களுக்கு வழங்கப்படும். விபத்தில் உயிரிழந்தால் அடக்க செலவிற்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். இதற்கான சிறப்பு முகாம் அனைத்து தபால் நிலையங்களில் நடைபெறும். பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயன் பெறலாம், என்றார்.