/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வீர அழகர் கோயிலில் ஆடி பிரம்மோற்ஸவ விழா இன்று கொடியேற்றம்
/
வீர அழகர் கோயிலில் ஆடி பிரம்மோற்ஸவ விழா இன்று கொடியேற்றம்
வீர அழகர் கோயிலில் ஆடி பிரம்மோற்ஸவ விழா இன்று கொடியேற்றம்
வீர அழகர் கோயிலில் ஆடி பிரம்மோற்ஸவ விழா இன்று கொடியேற்றம்
ADDED : ஜூலை 13, 2024 07:03 AM
மானாமதுரை, : சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான நிர்வாகத்துக்குட்பட்ட மானாமதுரை வீர அழகர் கோயிலில் வருடம் தோறும் ஆடி பிரம்மோற்ஸவ விழா 10 நாட்கள் நடைபெறும்.விழா நாட்களில் பல்வேறு வாகனங்களில் மண்டகப் படிகளுக்கு எழுந்தருளி காட்சியளிக்க உள்ளார். இந்தாண்டுக்கான விழா இன்று 13ம் தேதி காலை 5:00 மணியிலிருந்து 6:25 மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. திருக்கல்யாணம் வருகிற 18ம் தேதி மாலை 6:00 மணியிலிருந்து இரவு 7:35 மணிக்குள் நடைபெற உள்ளது.
ஜூலை 21 மாலை 6:00 மணியிலிருந்து 6:30 மணிக்குள் தேரோட்டமும், 22ம் தேதி பட்டத்தரசி கிராம மண்டகப்படியில் தீர்த்தவாரி உற்ஸவ நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ,கண்காணிப்பாளர் சீனிவாசன், அர்ச்சகர் கோபி மாதவன் (எ) முத்துச்சாமி செய்து வருகின்றனர்.