/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அ.தி.மு.க., ஆண்டுவிழா மஞ்சுவிரட்டு; உயர்நீதிமன்றம் தள்ளுபடி
/
அ.தி.மு.க., ஆண்டுவிழா மஞ்சுவிரட்டு; உயர்நீதிமன்றம் தள்ளுபடி
அ.தி.மு.க., ஆண்டுவிழா மஞ்சுவிரட்டு; உயர்நீதிமன்றம் தள்ளுபடி
அ.தி.மு.க., ஆண்டுவிழா மஞ்சுவிரட்டு; உயர்நீதிமன்றம் தள்ளுபடி
ADDED : ஆக 08, 2024 10:33 PM
மதுரை: அ.தி.மு.க., ஆண்டுவிழாவையொட்டி திருக்கோஷ்டியூரில் வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.
ஆபத்தாரணப்பட்டி பிரபு தாக்கல் செய்த மனு:
அ.தி.மு.க., 52வது ஆண்டு துவக்கவிழாவையொட்டி ஆக.,11ல் திருக்கோஷ்டியூரில் வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி, பாதுகாப்பு வழங்கக்கோரி போலீசாரிடம் மனு அளித்தோம். திருக்கோஷ்டியூர் போலீசார், 'மஞ்சுவிரட்டு நடத்த மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெறவில்லை. சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. அனுமதி மறுக்கப்படுகிறது,' என உத்தரவிட்டனர்.
மாவட்டத்தில் பல இடங்களில் ஏற்கனவே மஞ்சுவிரட்டு நடத்த அனுமதிக்கப்பட்டது. சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படவில்லை. அனுமதி மறுத்ததை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு: அரசியல் கட்சி ஆண்டுவிழாவிற்கு வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த அனுமதிக்க மனுதாரர் கூறும் காரணம் ஏற்புடையதல்ல. அனுமதி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் கலெக்டருக்கு உள்ளது. அவரை மனுதாரர் நாடியிருக்க வேண்டும். அதை தவிர்த்து எஸ்.பி.,யை நாடியுள்ளார். எஸ்.பி.,யை குறைகூற முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு உத்தரவிட்டனர்.