ADDED : மே 25, 2026 06:42 PM
திருப்புத்துார்,மே 26-
திருப்புத்துார் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க விளம்பர பதாகைகள் அகற்ற வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
திருப்புத்தூர் மதுரை,காரைக்குடி,கண்டரமாணிக்கம் ரோடுகள் முழுமையாக போக்குவரத்திற்கு பயன்படவில்லை. பெரும்பாலான இடங்களில் வர்த்தக நிறுவனங்களின் விளம்பர பதாகைகள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. குறிப்பாக பாதசாரிகள் நடந்து செல்லும் இடத்திலேயே இந்த விளம்பர பலகைகள் நிறுத்தப்படுகின்றன. இதனால் பாதசாரிகள் நடப்பது மட்டுமின்றி ரோட்டோரங்களில் டூ வீலர்கள் நிறுத்தவும் முடிவதில்லை.
இதனால் வாகனங்கள் செல்லும் பகுதியில் டூ வீலர்கள் நிறுத்தப்படுவது, பாதசாரிகள் குறுக்கிட்டு நடப்பது அதிகரித்துள்ளது. இதனால் வாகனங்கள் எளிதாக செல்ல முடியாதபடி ரோடுகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், சிறு,சிறு விபத்துக்களும் ஏற்படுகின்றன. இதனால் நெடுஞ்சாலை ரோடுகளில் வைக்கப்படும் விளம்பர போர்டுகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
