/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அழகப்பா கலைக் கல்லுாரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு
/
அழகப்பா கலைக் கல்லுாரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு
அழகப்பா கலைக் கல்லுாரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு
அழகப்பா கலைக் கல்லுாரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு
ADDED : மே 29, 2024 05:55 AM
காரைக்குடி: காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லுாரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.
முதல்வர் பெத்தாலட்சுமி கூறுகையில்; அழகப்பா அரசு கலைக் கல்லுாரியில் அரசு 2024 -- 25 ஆம் கல்வியாண்டிற்கான முதலாமாண்டு இளநிலை மாணவர் சேர்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு நாளை நடைபெறுகிறது.
காலை 9:30 மணிக்கு விளையாட்டு, முன்னாள் ராணுவத்தினர் என்.சி.சி., மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும். தொடர்ந்து ஜூன் 10 அன்று பி.எஸ்.சி., பி.சி.ஏ., பி.பி.ஏ., பாடப்பிரிவுகளுக்கும் ஜூன் 12 பி.ஏ., பாடப்பிரிவுகளுக்கு முதல் கட்ட கலந்தாய்வு நடைபெறும்.
கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவ மாணவிகள் உரிய மார்க் சீட், டி.சி., ஜாதி சான்றிதழ், ஆதார், வங்கிக் கணக்கு, சிறப்பு பிரிவினராக இருப்பின் அதற்குரிய சான்றுகள் ஆகியவற்றின் அசல் மற்றும் இரண்டு நகல்கள் 4 பாஸ்போர்ட் புகைப்படம் கல்லூரிக்கு விண்ணப்பித்த விண்ணப்ப படிவம் நகல்கள் ஆகியவற்றை கொண்டுவர வேண்டும்.