/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இருளில் அழகப்பா பல்கலை ஆர்ச் ரோடு
/
இருளில் அழகப்பா பல்கலை ஆர்ச் ரோடு
ADDED : மே 10, 2024 04:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடி அழகப்பா பல்கலை., நுழைவு வாயில் அருகே மின்விளக்குகள் எரியாமல் இருள் சூழ்ந்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
காரைக்குடி நகராட்சி மற்றும் இலுப்பக்குடி ஊராட்சி எல்லையை ஒட்டி அழகப்பா பல்கலை., கல்வி நிறுவனங்களின் நுழைவு வாயில் அமைந்துள்ளது. இந்த நுழைவுவாயில் உள்ள ஆர்ச் பகுதியில் மின்விளக்கு வசதியின்றி பல மாதங்களாக இருளில் மூழ்கி கிடக்கிறது. தவிர சாலைகளிலும் போதிய மின்விளக்கு இல்லாததால் வாகன ஓட்டிகள் சிரமமடைந்து வருகின்றனர். இரவு நேரங்களில் தொடர் விபத்து அபாயமும் நிலவுகிறது. இந்த ரோட்டில் மின் விளக்கு அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.