/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அலவாக்கோட்டை சிவன் கோயில் கும்பாபிேஷகம் ஜூலை 12 அன்று நடைபெறும்
/
அலவாக்கோட்டை சிவன் கோயில் கும்பாபிேஷகம் ஜூலை 12 அன்று நடைபெறும்
அலவாக்கோட்டை சிவன் கோயில் கும்பாபிேஷகம் ஜூலை 12 அன்று நடைபெறும்
அலவாக்கோட்டை சிவன் கோயில் கும்பாபிேஷகம் ஜூலை 12 அன்று நடைபெறும்
ADDED : ஜூலை 01, 2024 06:07 AM
சிவகங்கை : அலவாக்கோட்டை மீனாட்சி சொக்கலிங்கேஸ்வரர் கோயில் கும்பாபிேஷகம் ஜூலை 12 காலை 5:30 மணிக்கு நடைபெறுகிறது.
சிவகங்கை அருகே அலவாக்கோட்டையில் உள்ள மீனாட்சி சமேத சொக்கலிங்கேஸ்வரர் ஆலய புனரமைப்பு பணி முடிந்து, கும்பாபிேஷகத்திற்கான பணிகள் முடிவுற்றுள்ளன.
இதையடுத்து ஜூலை 12 அன்று காலை 5:30 மணி முதல் 6:15 மணிக்குள் கும்பாபிேஷகம் நடைபெற உள்ளது. இதற்காக ஜூலை 9 அன்று காலை 5:30 மணிக்கு தீபலட்சுமி, யஜமான சங்கல்பம், மகா கணபதி ேஹாமத்துடன் கும்பாபிேஷக பூஜைகள் துவங்குகின்றன. அன்று மாலை 4:30 மணிக்கு முதற்கால யாகசாலை பூஜையுடன் துவங்குகிறது. ஜூலை 10 அன்று காலை 9:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை, பூர்ணாகுதி, மாலை 6:00 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை, ஜூலை 11 அன்ற காலை நான்காம் கால யாகசாலை, மாலை 5ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெறும்.
ஜூலை 12 அன்று அதிகாலை 3:00 மணிக்கு ஆறாம் கால யாகசாலை பூஜையுடன் கும்பாபிேஷக பூஜைகள் துவங்குகிறது.
அன்று காலை 5:00 மணிக்கு பூர்ணாகுதி, தீபாராதனை, யாத்ராதானமும், அதனை தொடர்ந்து காலை 5:30 மணிக்கு கோபுர கலசங்களில் சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றி கும்பாபிேஷகத்தை நடத்தி வைக்கின்றனர். காலை 9:00 மணிக்கு மகா அபிேஷகம், மாலை 5:00 மணிக்கு திருக்கல்யாணம், இரவு பஞ்சமூர்த்திகள் புறப்பாடுடன் கும்பாபிேஷக பூஜைகள் முடிவடையும்.
கும்பாபிேஷகத்தை முன்னிட்டு அன்று முழுவதும் வேத, திருமுறை பாராயணம், உபன்யாசம் நடைபெறும். பிள்ளையார்பட்டி சிவாச்சாரியார் பிச்சை குருக்கள், திருப்பரங்குன்றம் ராஜா பட்டர் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
விழா ஏற்பாட்டை கும்பாபிேஷக கமிட்டி தலைவர் அருணாச்சலம், தலைவர் சண்முகம், உப தலைவர் தங்கமணி, செயலாளர் ராமசாமி, பொருளாளர் ராஜாமணி ஆகியோர் செய்து வருகின்றனர்.