ADDED : ஜூன் 21, 2024 04:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார்: திருக்கோளக்குடியில் புராதன சிறப்பு மிக்க குடவரைக்கோயில் திருக்கோளநாதர்_ ஆத்மநாயகி அம்மன் கோயில் மலைக்குன்றில் மூன்று அடுக்காக அமைந்துள்ளது.
இக்கோயில் ஆனித்திருவிழா ஜூன் 12 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக,ஆராதனை நடந்து இரவில் திருவீதி உலா நடந்தது. நேற்று தேரோட்டத்தை முன்னிட்டு நான்கு தேர்களில் சுவாமி எழுந்தருளல் நடந்தது.
முதல் தேரில் விநாயகர், சண்டிகேஸ்வரர், இரண்டாவது தேரில் சுப்பிரமணியர், வள்ளி தெய்வானை, 3 வது தேரில் திருக்கோளநாதர், 4 வது தேரில் ஆத்மநாயகி அம்மன் காலை 10:30 மணிக்கு எழுந்தருளினர். பின்னர் தேர்காலிற்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து காலை 11:00 மணிக்கு தேரோட்டம் துவங்கியது.