/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இடைக்காட்டூரில் அலங்கார தேர்பவனி
/
இடைக்காட்டூரில் அலங்கார தேர்பவனி
ADDED : ஜூலை 06, 2024 05:53 AM

மானாமதுரை : இடைக்காட்டூர் திரு இருதய ஆண்டவர் சர்ச் திருவிழாவையொட்டி நடந்த மின் அலங்கார தேர்பவனி மற்றும் திருப்பலியில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
இந்தாண்டிற்கான திருவிழா கடந்த 28ம் தேதி முன்னாள் ஆயர் சூசை மாணிக்கம் தலைமையில் கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான திரு இருதய பெருவிழாவை யொட்டி நேற்று காலை 7:00 மணிக்கு திருவிழா திருப்பலி, காலை11:00 மணிக்கு சிவகங்கை மறை மாவட்ட ஆயர் லூர்து ஆனந்தம் தலைமையில் பெருவிழா திருப்பலி, மாலை 6:00 மணிக்கு திருவிழா நிறைவு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. மாலை மின் அலங்கார தேர்பவனி நடந்தது.
இன்று மாலை 6:00 மணிக்கு நற்கருணை பெருவிழா நடக்கிறது.
ஏற்பாடுகளை திருத்தல அருள் பணியாளர் இம்மானுவேல் தாசன், மரியின் ஊழியர் சபை சகோதரிகள், இடைக்காட்டூர் சமூக முன்னேற்ற சங்கம்,செல்ஸ் இளைஞர் பேரவை, திரு இருதய பக்தர்கள் மற்றும் பங்கு இறை மக்கள் செய்திருந்தனர்.