நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை : மானாமதுரை சுந்தரபுரம் அக்ரஹார தெருவில் உள்ள சுந்தர விநாயகர் கோயில் வருடாபிஷேக விழாவை முன்னிட்டு விநாயகருக்கு 11 வகையான பொருட்களால் திருமஞ்சனம் செய்யப்பட்டு புனித நீர் அடங்கிய கடங்களை வைத்து ஹோமங்கள் வளர்க்கப்பட்டு சிறப்பு பூஜை, அபிஷேக, ஆராதனை நடைபெற்றன.
தொடர்ந்து விநாயகருக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை, அன்னதானம் நடைபெற்றது.