
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை அருகே வேம்பத்துாரில் உள்ள பூமி நீளா சுந்தரராஜ பெருமாள் கோயில் வருடாபிஷேக விழாவை முன்னிட்டு அதிகாலை உற்ஸவர் சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டது.
தொடர்ந்து கோயில் முன் மண்டபத்தில் ஹோமம் வளர்த்து புனித நீர் அடங்கிய குடங்கள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின்னர் அபிஷேக,ஆராதனை நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து தீபாராதனை அன்னதானம் நடைபெற்றது.