ADDED : ஏப் 27, 2024 04:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை உடையார் சேர்வை ஊரணி அருகே உள்ள ராமபிரானின் துளசி மகாலில் சைத்யோபசார மண்டகப்படி விழா, ராமநவமி, மகாலின் 3 ஆண்டு வருடாபிேஷக விழா நடைபெற்றது.
மார்ச் 25 அன்று நிகழ்வில் முருகனுக்கு சிறப்பு அபிேஷகம், நாதஸ்வர இன்னிசை நடந்தது.
ஏப்., 17 அன்று ராமநவமியை முன்னிட்டு அன்று காலை 9:00 மணிக்கு சுதர்சன ேஹாமம், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
மூன்றாவது நிகழ்ச்சியாக நேற்று காலை ராமபிரானின் வருடாபிேஷக விழா நடைபெற்றது.
நேற்று காலை 9:00 மணிக்கு மகா கணபதி, சுதர்சன, நவக்கிரக ேஹாமங்கள் நடைபெற்றது.
சிறப்பு அலங்காரத்தில் ராமன், சீதை, லட்சுமணன், அனுமன் எழுந்தருளினர். விழா குழு தலைவர் ராமசாமி, செயலாளர் சங்கரன், பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி விழா ஏற்பாட்டை செய்திருந்தனர்.

